பலாப்பழத்தில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள் - என்னென்ன தெரியுமா?

பொதுவாகவே பலாப்பழம் என்றாலே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதிர் உள்ள சுவைக்கு மாத்திரமின்றி ஆரோக்கியத்திற்காகவும் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.

அந்தவகையில் பலாப்பழமானது பெண்களின் உடலுக்கு எப்படியான நன்மையை வழங்குகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

பெண்களின் உடலுக்கு நன்மையை அள்ளி தரும் பலாப்பழம்

பெண்களின் உடலில் மாறி வரும் ஹார்மோன்களை சமாளிப்பதற்காக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

பலாபழத்தில் காணப்படும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற தாதுக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

👉நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

👉சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

👉செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

👉இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

👉எலும்புகளை வலுப்படுத்துகிறது.

👉இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.

👉ஆற்றல் நிலைகளை மேம்படுத்துகிறது.

📌தேவையான பொருட்கள்

👉பலாப்பழம் - 20

👉தேங்காய் பால் - 2 கப்

👉வெல்லம் - 150 கிராம்

👉ஏலக்காய் - 6

👉முந்திரி - தேவையான அளவு

👉பிஸ்தா - தேவையான அளவு

👉நெய் - தேவையான அளவு

📌செய்முறை

முதலில் பலாப்பழத்தில் இருந்து கொட்டைகளை நீக்கி தனியாக எடுத்துக்கொள்ள வெண்டும்.  

பின் பலாபழத்தை மட்டும் நறுக்கி வைக்கவும்.

அடுத்து ஓர் பாத்திரத்திர் தண்ணீர் சேர்த்து பலாப்பழத்தை வேக வைக்கவும்.

அது ஆறியவுடன் ஓர் மிக்ஸியில் சேர்த்து தண்ணீரும் வெல்லமும் சேர்த்து நன்றாக கிளறவும்.  

அடுத்ததாக ஓர் பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி , பிஸ்தாவை வறுத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகை ஊற்றி கொதிக்க வைத்து அதில் பலாப்பழ விழுது, ஏலத்தூள், தேங்காய் பால் வறுத்த முந்திரி, பிஸ்தா, பொடியாக நறுக்கிய பலாப்பழத்தை போட்டு இறுதியில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி பரிமாறவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.