தேநீர் குடிக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா...!

நம்மில் பல தேநீர் விரும்பிகள் தேநீருடன் சில உணவுகளை சேர்த்து உண்ணுவதில் அதிகம் விருப்பம் உடையவர்கள்.

இந்தநிலையில், இவ்வாறாக தேநீருடன் ஒரு சில உணவுகளை நாம் சாப்பிடும் பொழுது அது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடும்.

அந்த வகையில் தேநீருடன் சேர்த்து சாப்பிட கூடாத சில உணவுப் பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

✅பழங்கள் 

ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள் தேநீரில் காணப்படும் டானின்களுடன் வினைபுரிந்து ஒருவித கசப்பு சுவையை ஏற்படுத்துகிறது.

இந்த பழங்களில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மை தேநீரின் சுவையில் குறிக்கிடுகிறது அத்தோடு தேநீர் மற்றும் சாக்லேட் ஆகியவை அற்புதமான பொருத்தமாக தெரிந்தாலும் சாக்லேட்டுகள் அதிக இனிப்பு சுவையை கொண்டிருப்பதால் அது தேநீரின் சுவையை மந்தமாக்கி விடுகிறது.

✅சாக்லேட்

அதுமட்டுமல்லாமல் தேநீர் மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டிலும் காணப்படும் காஃபின் ஒரு சில நபர்களுக்கு தூண்டுதலாக அமைந்து அதனால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அத்தோடு, காரமான உணவுகள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் தேநீரின் சுவையை மிஞ்சி விடுகின்றன.

✅காரமான பொருட்கள் 

இதனால் உங்களால் தேநீரை ரசித்து குடிக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் மசாலா மற்றும் தேநீர் ஆகிய இரண்டும் ஒரு சில நபர்களில் வயிறு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

அதிகப்படியான ஃப்ளேவர் கொண்ட சீஸ் கட்டாயமாக தேநீருடன் குறுக்கிடுவதுடன் அது தேநீரின் வாசனையை கட்டுப்படுத்துகிறது என்பதால் இறுதியில் தேநீரை ரசித்து பருக முடியாத நிலை உருவாகிறது.

✅பொரித்த உணவுகள்

எண்ணெய் அதிகமான மற்றும் பொரித்த உணவுகள் நிச்சயமாக தேநீரின் சுவையை மிஞ்சிவிடும்.

இது போன்ற உணவுகளை தேநீருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அதில் உள்ள எண்ணெய் தன்மை ஒருவித மோசமான சுவையை ஏற்படுத்துகிறது.

இதனால் தேநீருடன் நாம் உட்கொள்ளும் சில உணவுகளை உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாத வண்ணம் கடைப்பிடிப்பது முக்கியமாகும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.