புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் 10 உணவுகள்.

புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.

உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.

அந்தவகையில், புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் 10 உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

✅1. கேனில் அடைக்கப்பட்ட பானங்கள்

கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் மார்பகம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய Bisphenol A என்ற வேதிப்பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.

✅2. கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்கள்

கார்பனேடட் செய்யப்பட்ட குளிர்பானங்களில், அதிகளவில் சர்க்கரை இருக்கம். இதனால் கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

✅3. ஹைட்ரோஜெனேட்டட் எண்ணெய்

உணவுகளின் வாழ்நாளை நீடிக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரோஜெனேட்டட் எண்ணெய்கள் ஃப்ரி ராடிக்கல்களை வெளியிடுகிறது. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

✅4. மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்ன்

மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ஃப்ளூரோக்டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்ககூடியது.

✅5. ரீஃபைண்ட் சர்க்கரை

ரீஃபைண்ட் செய்யப்பட்ட சர்க்கரை இன்சுலீன் அளவை அதிகரிக்கக் கூடியவை, இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

✅6. ப்ராசஸ் செய்யப்பட்ட இறைச்சி

பேக்கான், சாசேஜ் போன்ற ப்ராசஸ் செய்யப்பட்ட இறைச்சி வகைகளில் பிரசர்வேட்டிவ்கள் மற்றும் நைட்ரேட்கள் உள்ளது. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் ஆகின்றன.

✅7. சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி அதிகம் எடுத்துக்கொள்வது குடல் புற்றுநோயை ஏற்படுத்தும்.

✅8. ஊறுகாய்கள்

ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளதால் ஊறுகாய் அதிகளவு சாப்பிடுவது வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

✅9. ஸ்மோக்ட் உணவுகள்

புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளது. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது.

✅10. உப்பு மீன்

கருவாட்டில் நைட்ரோசாமைகள் உள்ளது. இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.              


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.