அடர்ந்த நீளமான கூந்தலுக்கு இந்த ஒரு ஜூஸ் போதும்

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், அடர்ந்த நீளமான கூந்தலுக்கு உதவும் நெல்லிக்காய் ஜூஸை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

✅தேவையான பொருட்கள்

👉நெல்லிக்காய்- 4

👉இஞ்சி- 1 துண்டு

👉கறிவேப்பிலை- 1 கொத்து

👉உப்பு- தேவையான அளவு

👉தண்ணீர்- 2 கப்

👉எலுமிச்சை - ½

✅செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இதில் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இத்தனை வடிகட்டி மூலம் வடிகட்டி எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.

இறுதியாக இதில் எலுமிச்சை சாறை பிழிந்து கலந்தால் சத்தான நெல்லிக்காய் ஜூஸ் தயார்.

இந்த ஜூஸை தினமும் காலையில் தொடர்ந்து குடித்து வர முடி உதிர்வை தடுக்கும், நீளமான கூந்தலுக்கு வழிவகுக்கும் மற்றும் முக பளபளப்பிற்கு உதவும்.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.