வரலாற்றில் இன்று – 03.08.2024
ஆகஸ்டு 3 (August 3) கிரிகோரியன் ஆண்டின் 215 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 216 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.
✅ இன்றைய தின நிகழ்வுகள்
435 – கொன்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர்) பைசண்டைன் பேரரசன் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.
1492 – கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.
1492 – ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்கர்களினால் வெளியேற்றப்பட்டனர்.
1645 – முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் புனித ரோமப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.
1678 – அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.
1783 – ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.
1858 – இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.
1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.
1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
1934 – அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
1949 – தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1975 – மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1990 – காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2006 – திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
✅ இன்றைய தின பிறப்புக்கள்
1924 – லியொன் யூரிஸ், அமெரிக்க நாவலாசிரியர் (இ. 2003)
1957 – மணி சங்கர், இந்திய திரைப்பட இயக்குனர்
✅ இன்றைய தின இறப்புகள்
1977 – மக்காரியோஸ், சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதி (பி. 1913)
1993 – சுவாமி சின்மயானந்தா, வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. 1916)
2008 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (பி. 1918)
✅ இன்றைய தின சிறப்பு நாள்
நைஜர் – விடுதலை நாள் (1960)
வெனிசுவேலா – கொடி நாள்
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.