தினமும் மதிய உணவுக்கு முன் 3 பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

தினமும் மதிய உணவுக்கு முன்னர் 3 பூண்டு பற்களை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும்  நன்மைகள் என்னவென்று நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

✅ இதய நோய் ஆபத்தை குறைக்கிறது

இதயத்துக்கு இதமானதாக பூண்டு அறியப்படுகிறது. இதை உங்கள் அன்றாட உணவில் நீங்கள் தினமும் எடுத்துக்கொள்வதால், அது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. 

பூண்டில் உள்ள சல்ஃபர் என்ற உட்பொருள், உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கொழுப்பு அளவைக் குறைக்கிறது. உங்கள் இதயத்தை வலுவுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

✅புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலில் ஃப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. இந்த ஃப்ரீ ராடிக்கல்கள்தான் உங்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளர உதவுகிறது. எனவே உங்கள் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ளும்போது, அது புற்றுநோயை தடுக்கிறது.

✅சளி, இருமல் போன்ற தொற்றுக்களை குணப்படுத்துகிறது

பூண்டு, இயற்கை நோய் எதிர்க்கும் ஒன்று. இதில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், பல்வேறு தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது. உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. பூண்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு சளி, இருமல் போன்ற தொற்றுக்களை குணப்படுத்துகிறது.

✅மூட்டுவலியைப் போக்குகிறது

ஆர்த்ரிட்டிஸ் பிரச்னைகளால் நீங்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தீர்கள் என்றால், அதை பூண்டு தடுக்கிறது. ஆர்த்ரிட்டிஸ்க்கு பூண்டுதான் இயற்கை நிவாரணி. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், வலியைக் குறைக்க உதவுகிறது. உடல்லி ஆர்த்ரிட்ஸ் நோயால் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது. 

உங்கள் உணவில் பூண்டை நீங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, அது சிறந்த மூட்டு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.உங்களின் மூட்டுகளை வலுவாக்குகிறது.

✅செரிமானம்

உடலிக் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உங்கள் உடலில் செரிமான எண்சைம்களை தூண்டுவிடுகிறது. அதன் மூலம் உங்கள் உடலில் செரிமானத்தை அதிகரிக்கிறது.

உங்கள் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.