கருவளையம் நிரந்தரமாக நீங்க வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்.

பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.

ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.

அந்தவகையில், ஒரே வாரத்தில் கருவளையத்தை நிரந்தரமாக நீங்க இதை மட்டும் செய்தால் போதும். 

👉1. காபி மாஸ்க்

காபி தூள் கண்களுக்குக் கீழே உள்ள கருமையை நீக்குவதற்குப் பயன்படுகிறது. இதனை வாரத்திற்கு 2-3 முறை பயனப்டுத்தலாம்.

ஒரு பாத்திரத்தில் காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றி தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து பின் கழுவவும்.

👉2. பாதம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றுவதைத் தடுக்கிறது மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது.

பாதாம் எண்ணெயுடன் சிறிது தேன் சேர்த்து தினமும் கண்களைச் சுற்றி தேய்த்து வந்தால் கருவளையம் நீங்கும்.

👉3. பால் + பேக்கிங் சோடா

பாலில் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின் கண்களைச் சுற்றி தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது கருவளையத்தை நீக்கி கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

👉4. வெள்ளரி மாஸ்க்

நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக வெட்டி அரை மணி நேரம் குளிரூட்டவும்.

பின் கண்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

👉5. அன்னாசி மாஸ்க்

அன்னாசி பழச்சாற்றுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கண்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவவும்.

இப்படி தினமும் இரண்டு வாரங்கள் செய்து வந்தால், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையம் முற்றிலும் மறைந்துவிடும்.

👉6. க்ரீன் டீ

தேநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை 5-10 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

பின்னர் 10-15 நிமிடங்கள் கண்களில் வைக்கவும். இப்படி தினமும் செய்து வந்தால் கருவளையம் நீங்கி வீக்கம் குறையும்.

👉7. சரியான தூக்கம்

கருவளையங்களை போக்க முக்கியமானது சரியான தூக்கம் ஆகும்.

அதிக நேரம் மொபைல் பயன்படுத்தாமல் தூங்கினால் கருவளையம் மெல்ல மெல்ல குறைந்துவிடும்.     

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.