ஜிம் போகாமல் எடை குறைய காலை உணவாக இதை சாப்பிடுங்கள்.
இன்றைய நவீன காலகட்டத்தை பொருத்த வரையில் நாம் உண்ணும் உணவு நமது உடலில் பல வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றது.
இதன் காரணமாக இன்னும் பல நோய்களும் நம்மை பற்றிக்கொள்கின்றன. அதிக உடல் எடை தன்னம்பிக்கை குறைய காரணமாக இருப்பதோடு, உடல் பருமனை குறைப்பதில் காலை உணவுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது.
காலை உணவு ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் உட்கொள்ளும் மிக முக்கியமான உணவாக உள்ளது. இது நமது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது
காலை நேர உணவில் இந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் என நாம் இங்கு பார்ப்போம்.
✅ஓட்ஸ்
ஓட்ஸில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
✅தயிர்
தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து எடை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிட்டால், உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
✅முட்டை
முட்டையில் அதிக அளவில் புரதம் நிறைந்துள்ளது. இது தசைகளை உருவாக்க உதவுகிறது. மேலும் இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது.
✅பழங்கள்
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் உடல் எடையை வேகமாக குறைக்கவும் உதவுகின்றன.
✅விதைகள்
பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிக அளவில் உள்ளன. இவற்றை காலை வேளையில் உட்கொள்வதால் வயிறு நீண்ட நேரத்துக்கு நிரம்பிய உணர்வுடன் இருக்கின்றது. இதனால் கலோரிகளும் விரைவாக எரிக்கப்பட்டு தொப்பை கொழுப்பு வேகமாக குறைகிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.