கொழுப்பு மற்றும் எடை குறைக்க கைகொடுக்கும் காலை உணவுகள்!
காலை உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. இதன் மூலம் தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைப்பதிலும் ஒட்டுமொத்த எடையைக் குறைப்பதிலும் பெரிய அளவில் உதவி புரிவதாக வலுனர்கள் கூறுகின்றனர்.
எடை இழப்பில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. காலையில் நாம் உட்கொள்ளும் உணவின் தாக்கம் நாள் முழுதும் இருக்கும்.
இவை உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பகலில் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
தொப்பை கொழுப்பை குறைக்க......
உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
நம்முடைய காலை பழக்கங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக காலை உணவுக்கு எடை இழப்பில் முக்கியமான பங்கு உள்ளது. தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
✅பழங்கள்
காலை வேளையில் பழங்களை சாப்பிடுவது மிக நல்லது. பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கள் கலோரி அளவை அதிகரிக்காமல் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.
ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின்களும் தாதுக்களும் அதிகமாக உள்ளன. காலை உணவில் பழங்களை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு உடல் எடையும் வேகமாக குறையத் தொடங்கும்.
✅முளைகட்டிய பயறு
முளைகட்டிய பயறு வகைகளை சாட் செய்து சாப்பிடுவது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும். வெங்காயம், தக்காளி மற்றும் மசாலாப் பொருட்களுடன் முளைத்த பயறுகளை உட்கொண்டால் உடலுக்கு நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. இதனால் எடையும் அதிகரிக்காது.
✅முட்டை
பலர் அதிகமாக விரும்பி உட்கொள்ளும் காலை உணவாக இருக்கின்றது. முட்டை பலருக்கு பிடித்த ஒரு தேர்வாக இருப்பதோடு இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது தசைகளை உருவாக்க உதவுகிறது. முட்டை நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. நாள் முழுதும் நமக்கு தேவையான ஆற்றலையும் இது நமக்கு அளிக்கின்றது.
✅ஓட்ஸ்
காலை உணவுக்கு ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரத்திற்கு உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் இது கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.