அடிக்கடி இருமல் வருகின்றதா? தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்

பருவக்கால மாற்றத்தினால் இருமல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ள நிலையில் குளிர்காலங்களில் இருமல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது.

அவ்வாறான நிலையில் சளி, காய்ச்சல் அல்லது ஒவ்வாமையால் எதிர்வினையாக இருமல் ஏற்படுகின்றது. நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விடயங்களை பற்றி இந்கு பார்ப்போம்.

✅இருமலை அடக்குவது

பலர் இருமலை அடக்க முயற்சி செய்கிறார்கள். குறிப்பாக பொது இடங்களில் இருக்கும்போது இருமலை அடக்க முயல்கிறோம். ஆனால் அவ்வாறு செய்வது தீங்கு விளைவிக்கும். இருமலின் போது, ​​நுரையீரலில் இருந்து சளி வெளியேறுகிறது. அதை அடக்கினால் சளி வெளியேறாமல் நுரையீரலில் குவிந்து தொற்று அதிகரிக்கும்.  

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல்

இருப்பது இருமலில் இருந்து நிவாரணம் பெற தண்ணீர் குடிப்பதே சிறந்த வழி. நீர் சளியை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால் தண்ணீர் எளிதாக சளி வெளியேற்ற உதவுகிறது. இருமல் இருக்கும்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால், தொண்டை வறட்சி ஏற்படும்.

✅அறையில் உலர்ந்த காற்று

வறண்ட காற்று உள்ள இடத்தில் இருந்தால், அதனால் தொண்டை எரிச்சல் ஏற்பட்டு இருமல் அதிகரிக்கும். ஹ்யுமிடிஃபையரை பயன்படுத்தி அறையில் ஈரப்பதத்தை பராமரிக்க முயற்சிக்கவும்.

✅ஓய்வு இல்லாமல் இருப்பது

இருமலில் இருந்து மீள போதுமான ஓய்வு எடுப்பது மிகவும் அவசியமாகும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, ​​உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்க ஓய்வு தேவைப்படுகிறது.

✅ஆரோக்கியமற்ற உணவு

வறுத்த, காரமான, குளிர்ச்சியான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருமலை அதிகரிக்கும். ஆகையால் இவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைத்து இருமலை அதிகரிக்கும்.

✅புகைபிடித்தல் மற்றும் மாசுபாடு

புகைபிடித்தல் (Smoking) மற்றும் மாசுபாடு (Pollution) காரணமாக நுரையீரல் கடும் சேதத்திற்கு ஆளாகிறது. இதுமட்டுமின்றி இதனால் இருமலும் அதிகரிக்கின்றது. அதேபோல் புகைப்பிடித்தல் இருமலுக்கு எதிரி. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை விட்டுவிடுவது நல்லது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.