தினமும் காலை வெறும் வயிற்றில் இஞ்சி டீ குடித்தால் இவ்வளவு பிரச்சினையா?

பொதுவாக எமது சமையலறையில் மருத்துவம் குணம் நிறைந்த பல பொருட்கள் இருப்பினும் அதில் மிக முக்கியமாக இஞ்சி காணப்படும் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.

மழைக்காலம் ஆரம்பித்தாலே இஞ்சி டீ எல்லோருக்கும் மிக அவசியமாகும். இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ மற்றும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தாலோ பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஒருவர் இஞ்சி டீயை அதிகமாக குடித்தால் எந்த மாதிரியான பக்க விளைவுகளை சந்திக்கலாம் என நாம் இங்கு பார்ப்போம்.

✅வயிற்றுப்போக்கு

இஞ்சி டீயை அதிகமாக குடிப்பது வயிற்றுப் போக்கின் அபாயத்தை அதிகரிக்கும். இஞ்சியில் உள்ள பண்புகளை அதிகமாக எடுக்கும் போது, அது செரிமானத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, வயிற்றுப் போக்கிற்கு வழிவகுப்பதோடு, மிகுந்த உடல் அசதியை ஏற்படுத்தும். எனவே இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக எடுக்காமல், அளவாக குடியுங்கள்.

✅இரத்த அழுத்த பிரச்சனை

இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் இஞ்சி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர சாதாரண இரத்த அழுத்தத்தைக் கொண்டவர்கள் இஞ்சி டீயை அளவாக குடிக்க வேண்டும். அதிகமாக குடித்தால், அது தீங்கை விளைவிக்கும். எனவே இஞ்சி டீ ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவாக குடிப்பதே நல்லது. இல்லாவிட்டால் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

✅தலைமுடி உதிர்வு

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் தலைமுடி உதிர்வைத் தடுக்க உதவும். அதே வேளையில் அந்த இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது அப்படியே எதிர்மறையாக செயல்பட்டு, முடி உதிர்வை உண்டாக்கும். எனவே இஞ்சி டீ குடிக்கும் பழக்கம் இருந்து, திடீரென்று தலைமுடி அதிகம் உதிர்வதை அனுபவித்தால், நீங்கள் இஞ்சி டீயை அதிகமாக குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் இஞ்சி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

✅வயிற்று எரிச்சல்

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் வயிற்றி அமில உற்பத்தியை அதிகரிக்கும். எனவே இஞ்சி டீயை அதிகமாக குடிக்கும் போது, அது வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இஞ்சி டீயை அதிகமாக குடித்தால், அது மலசிக்கல் மற்றும் வாய்வு தொல்லையை உண்டாக்கும்.

✅தூக்கமின்மை பிரச்சனைகள்

இஞ்சி டீயை அதிகம் குடிப்பதால் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை தூக்கமின்மை. யார் ஒருவர் அதிகமாக இஞ்சி டீயைக் குடிக்கிறாரோ, அவர் தூக்கமின்மையால் அவதிப்படுவார். இம்மாதிரியான சூழ்நிலையில் இஞ்சி டீ குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.