உடலின் சர்க்கரை அளவை குறைக்க கோதுமை மாவுடன் இந்த 2 பொருளை சேருங்கள்
நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கை முறை மாற்றங்களும் தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்யும்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்க ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும்.
அந்தவகையில், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க கோதுமை மா அறைக்கும்பொழுது இந்த இரண்டு பொருட்களை சேருங்கள்.
✅கோதுமை மாவுடன் 2 பொருள்
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் சர்க்கரை அளவை காட்டுக்குள் வைக்க காலை இரவு நேரங்களில் சப்பாத்தி செய்தி சாப்பிடுவார்கள்.
அவ்வாறு உண்ணும் சப்பாத்திகளில் இந்த 2 பொருட்களை சேர்த்தால் சுவையும் அதிகரிக்கும், ஆரோக்கியமும் கொடுக்கும்.
அந்தவகையில், கோதுமை உடன் கம்பு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை கலந்து அரைத்து சாப்பிடலாம்.
அதாவது, 50 சதவீதம் கோதுமை உடன், 25 சதவீதம் கம்பு மற்றும் 25 சதவீதம் கொண்டைக்கடலை போன்ற அளவுகளில் அரைக்கவும்.
இந்த மாவனது எலும்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்கிறது.
கோதுமை உடன் கம்பு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சப்பாத்தியானது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.