வரலாற்றில் இன்று - 26.09.2024

செப்டம்பர் 26 (September 26) கிரிகோரியன் ஆண்டின் 269 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 270 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 96 நாட்கள் உள்ளன.

📌இன்றைய தின நிகழ்வுகள்

1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

1580 – சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.

1687 – ஏத்தன்சு நகரத்தை முற்றுகையிட்ட ஒட்டோமான் படையினரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.

1777 – பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.

1783 – மாசசூசெட்சில் ஆயுதக் கிளர்ச்சி ஷேய்சின் கிளர்ச்சி ஆரம்பம்.

1907 – நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.

1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம்.

1934 – ஆர்.எம்.எசு. குயீன் மேரி நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.

1950 – ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றினர்.

1950 – இந்தோனீசியா ஐநாவில் இணைந்தது.

1954 – ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கி கப்பல் ஒன்று மூழ்கியதில் 1,172 பேர் கொல்லப்பட்டனர்.

1960 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் இடம்பெற்றது.

1960 – பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.

1962 – யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.

1973 – அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் பறந்து காட்டியது.

1983 – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.

1984 – ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது.

1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.

1997 – இந்தோனேசிய விமானம் மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் கொல்லப்பட்டனர்.

1997 – இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்த்யது.

2002 – செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2007 – வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.

📌இன்றைய தின பிறப்புகள்

1820 – ஈஸ்வர சந்திர வித்யாசாகர், இந்திய மெய்யியலாளர், ஓவியர் (இ. 1891)

1833 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல்வாதி (இ. 1891)

1849 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (இ. 1936)

1867 – வின்சர் மெக்கே, அமெரிக்க ஓவியர் (இ. 1934)

  1890 – பாபநாசம் சிவன், கருநாடக இசை அறிஞர் (இ. 1973)

1897 – ஆறாம் பவுல் (திருத்தந்தை) (இ. 1978)

1908 – பெரியசாமி தூரன், கருநாடக இசை அறிஞர் (இ. 1987)

1913 – திருக்குறள் வீ.முனிசாமி, தமிழறிஞர் (இ. 1994)

1923 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர் (இ. 2011)

1932 – மன்மோகன் சிங், இந்தியாவின் 14வது பிரதமர்

1965 – பெத்ரோ பொரொசென்கோ, உக்ரைனின் 5வது அரசுத்தலைவர்

1979 – டாவி ரோயிவாசு, எசுத்தோனியாவின் 1வது பிரதமர்

1981 – செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை

📌 இன்றைய தின இறப்புகள்

1954 – தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி (பி. 1876)

1959 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கை பிரதமர், (பி. 1899)

  1987 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (பி. 1963)

2010 – குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை (பி. 1910)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.