நாள் முழுவதும் AC- இல் இருந்தால் உடலுக்கு என்ன நடக்கும் தெரியுமா?
ஏர் கண்டிஷனிங் (AC) வெப்பமான காலநிலையில் உயிர்காக்கும். ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் குளிர்ந்த அறையில் உங்களுடைய நாளை செலவழித்தார் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும் என்பது தெரியுமா?
அதிக வெப்பம் நிலவும் காலநிலைகளில் AC ஒரு உயிர்காப்பானாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர்கள் போன்ற பகுதியில் வெப்பம் என்பது அதிகமாகவே இருக்கும்.
அவ்வாறான சூழ்நிலையில், AC அத்தியாவசியாமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் மக்கள் நீண்ட நேரமாக AC இல் இருக்க நேரிடுகிறது.
இதன் மூலம் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்பதையும் நீங்கள் முழுதாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
✅ஏற்படும் பாதிப்பு
ஏசி காற்றை உலர்த்துகிறது, இதனால் நீங்கள் திரவங்களை வேகமாக இழக்கிறீர்கள். நீரேற்றமாக இருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதிக நேரம் ஏசியில் இருப்பதால் சரும வறட்சி, கண்களில் எரிச்சல், மூச்சு விடுதலில் அசௌகரியம் ஏற்படும்.
உடலின் நோய் எதிர்ப்பு தன்மை வெகுவாக குறைந்து ஜலதோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கப்படுகின்றது.
AC-ஐ சரிவர பராமரிக்காமல் பயன்படுத்துவதால் சுவாசக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.
நீண்ட நேரம் குளிரில் இருப்பது மூட்டு இணைப்புகளில் பிரச்சனையை உண்டாக்கும்.
✅எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
வறட்சியில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு நீங்கள் போதுமானளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஈரப்பதமூட்டியை (Humidifier) பயன்படுத்தி ஏசினால் ஏற்படும் வறட்சியை சமன்படுத்த முயற்சி செய்யலாம்.
சரியான கால இடைவெளியில் AC-ஐ சுத்தம் செய்ய வேண்டும்.
AC இன் வெப்பநிலையில் அதிக குளிர் மற்றும் அதிக வெப்பநிலையில் வைக்கக் கூடாது.
உங்களது சருமம் இதன்போது வறட்சியால் பாதிக்கப்பட்டால், சரும வறட்சியை தடுக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.