எப்பொழுதும் முகம் பளபளப்பாக இருக்க இந்த ஒரு பொருள் போதும் - எப்படி பயன்படுத்துவது?

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.

ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

அந்தவகையில், எப்பொழுதும் முகம் பளபளப்பாக இருக்க மஞ்சள் ஒன்று போதும். 

✅1. தேவையான பொருட்கள்

👉பச்சை மஞ்சள் துருவியது- 1 ஸ்பூன்

👉பால்- 2 ஸ்பூன்

👉தேன்- 1 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

ஒரு கிண்ணத்தில் பால் மற்றும் தேனுடன் மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போல்உருவாக்கவும்.

பின் இதனை கண் பகுதியைத் தவிர்த்து, முகத்தில் மெதுவாக தடவவும்.

அடுத்து 20 நிமிடங்கள் விடவும், பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

✅2. தேவையான பொருட்கள்

👉பச்சை மஞ்சள் துருவியது- 1 ஸ்பூன்

👉கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் கற்றாழை ஜெல்சேர்த்து நன்கு கலக்கவும்.

பின் இதனை முகத்தில் சமமாக தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

இறுதியாக குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்கவும்.

✅3. தேவையான பொருட்கள்

👉பச்சை மஞ்சள் துருவியது- 1 ஸ்பூன்

👉எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

✅பயன்படுத்தும் முறை

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இதனை கலந்து முகத்தின் கரும்புள்ளிகளுக்கு தடவவும்.

பின் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி, மாய்ஸ்சரைசர் தடவவும்.      

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.