தூக்கி எரியும் வாழைப்பழத்தோல் முகப்பருவைத் தடுக்குமா?

முகப்பரு டீன் ஏஜ் வயது முதல் நடுத்தர வரை எல்லோருக்கும் பொதுவாக வந்து கொண்டுதான் இருக்கும். இறந்த சரும செல்கள் மற்றும் எண்ணெய் சுரப்பு தோல் துளைகளை தடுக்கும்.

இது முகப்பருவை ஏற்படுத்துகிறது. முகப்பருவைத் தடுக்க ஆயிரக்கணக்கான அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் இருந்தாலும், அவற்றில் சில மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதனால் முகப்பருவைத் தடுக்க பனா பீல் எவ்வாறு உதவுகிறது என்பதைக் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

பழுத்த வாழைப்பழத் தோலை முகப்பரு உள்ள இடத்தில் தேய்க்கவும்

வாழைப்பழத்தோலின் உட்புறத்தை முகத்தில் தடவி மெதுவாக தேய்க்கவும். தேய்க்கும் போது வாழைப்பழத் தோல் கருமையாக மாறிய பிறகு, அதை தூக்கி போடுங்கள்... புதிய தோலுடன் மீண்டும் மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

✅தேன்

வாழைப்பழத் தோலை ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கவும் இந்த கலவையை முகம் முழுவதும் தடவவும். 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்து வந்தால், தெளிவான சருமம் கிடைக்கும்.

✅எலுமிச்சை சாறுடன்

இரண்டு பச்சை வாழைப்பழங்களின் தோலை எடுத்து சாறு எடுக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும். இந்தக் கலவையை முகம் முழுவதும் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் அப்படியே விடவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு நான்கைந்து முறை இந்த ஃபேஷியல் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

✅முட்டையின் வெள்ளைக்கரு

ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வாழைப்பழத்தோல் விழுது சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலக்கவும். பின்னர் இந்த கலவையை முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குழாய் நீரில் கழுவவும்.

✅ரோஸ் வாட்டர்

ஒரு டேபிள் ஸ்பூன் வாழைப்பழத்தோல் பேஸ்ட்டை 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டருடன் கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து தடவி வந்தால் முகப்பரு முற்றிலும் குறையும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.