தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதாம் ஏன் தெரியுமா?

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க, காலையில் சரியான உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சில உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்ற இருக்கும் நிலையில், சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலுக்கு பல ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்

சில உணவுகள், உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டதாக இருந்தாலும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கும். ஆரோக்கியமாக இருக்க வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள் எவை என நாம் இங்கு பார்ப்போம்.

✅பச்சை வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள பிரக்டோஸ் ஜீரணிக்க கடினமாக இருப்பதால், வெறும் வயிற்றில் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் வயிற்றில் வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

✅காபி

நம்மில் பலருக்கு காபி குடித்தால் தான், அன்றைய நாள் நன்றாக தொடங்குவது போன்ற இணர்வு இருக்கும். ஆனால், வெறும் காபி வெறும் வயிற்றில் காபி குடித்து நாளைத் தொடங்குவது நல்லதல்ல என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். காபியில் உள்ள டானின் நாள் முழுவதும் அமில வீக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் இதனால் நெஞ்செரிச்சல், வாயு பிரச்சனைகள் மற்றும் வயிற்றில் அமில அளவு அதிகரிக்கும் 

✅அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத்தில் அதிக அளவு ப்ரோமிலைன் உள்ளது. எனவே, காலையில் வெறும் வயிற்றில் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இது தவிர, ப்ரோமெலைன் வயிற்று அமிலத்துடன் கலந்து, குடல் சுவர்களை பாதிக்கலாம்.

✅தக்காளி

தக்காளியில் ஏராளமான டானிக் அமிலம் உள்ளதால், இது வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் புளிப்பு ஏப்பத்தை ஏற்படுத்தும். இது தவிர, தக்காளியில் இருக்கும் அமிலத்தன்மை, வயிற்றில் இருக்கும் இரைப்பை குடல் அமிலத்துடன் வினைபுரிந்து, வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.