தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
பேரீச்சம்பழம், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக் கூடிய பழங்களில் ஒன்று. பேரீச்சம்பழங்களை தினசரி உட்கொள்வது உங்கள் உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.
பழங்களை தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோயற்ற வாழ்வை வாழலாம். அந்த வகையில், பேரீச்சம்பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
✅ஆற்றல்
பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளைப் போல அல்லாமல், பேரீச்சம்பழத்தில்இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. பேரிச்சம்பழம் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சர்க்கரைகளின் ஆதாரமாக இருப்பதால் ஆற்றலை அள்ளி வழங்குகிறது. குறிப்பாக உடனடி ஆற்றல் தேவைப்படும் நபர்களுக்கு பேரீச்சம் பழங்கள் ஒரு சிறந்த சிற்றுண்டி தேர்வாக இருக்கும்.
✅எலும்பு ஆரோக்கியம்
பேரீச்சம்பழத்தில் உள்ள கால்சியம், செலினியம், மாங்கனீஸ் மற்றும் தாமிரம் எலும்புகளை வலுவாக்கும். அதாவது பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் வலுவடையும். எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் அதே நேரத்தில், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் பெருமளவு குறைக்கும்.
✅இதய ஆரோக்கியம்
பொட்டாசியம் நிறைந்த, பேரீச்சம்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இரத்த நாளங்களை தளர்த்தவும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இதில்; உள்ள பொட்டாஷியம் மற்றும் மெக்னீசியம் உதவுகிறது. உங்கள் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பேரீச்சம்பழம் அவசியம் டயட்டில் இருக்கட்டும்.
✅குடல் ஆரோக்கியம்
பேரீச்சம்பழத்தில் கணிசமான நார்ச்சத்து உள்ளதால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்கவும், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை பெருக்கவும் உதவுகிறது. பேரீச்சம்பழங்களைத் தவறாமல் உட்கொள்வது செரிமான அமைப்பு சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவும்.
✅உடல் எடை அதிகரிக்க உதவும்
இயற்கையான சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் பல அத்தியாவசிய புரதங்கள் உள்ளன. நீங்கள் மிகவும் ஒல்லியாக பலவீனமாக இருந்தால், தினமும் ஐந்து அல்லது ஆறு பேரீச்சம்பழம் சாப்பிடத் தொடங்குங்கள். சிறிது காலத்திலேயே பலன் தெரியும்
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.