ராஜஸ்தான் அணியை அசால்டாக வீழ்த்தியது ஹைதராபாத்.8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி




ராஜஸ்தான் அணியை அசால்டாக வீழ்த்தியது ஹைதராபாத்.8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஐபிஎல் டி.20 தொடரின் நேற்றைய போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.


துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.


இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணியின் துவக்க வீரர்களான ராபின் உத்தபா 19 ரன்களும், ஸ்டோக்ஸ் 30 ரன்களும் எடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தனர்.


இதன்பின் வந்த சஞ்சு சாம்சன் 36 ரன்களிலும், கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 7 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது.


இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான பாரிஸ்டோ 4 ரன்னிலும், டேவிட் வார்னர் 10 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் – மணிஷ் பாண்டே கூட்டணி ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு பொறுமையாக ரன் சேர்த்தது.


மணிஷ் பாண்டே 47 பந்துகளில் 83 ரன்களும், விஜய் சங்கர் 52 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.