தப்லீக் ஜமாத் அமைப்பை இலங்கையில் உடனடியாக தடை செய்ய வேண்டும்! - ஞானசார தேரர்

 தப்லீக் ஜமாத் அமைப்பை இலங்கையில் உடனடியாக தடை செய்ய வேண்டும்! - ஞானசார தேரர்.


சவூதி அரசாங்கம் தப்லீக் ஜமாஅத் அமைப்பை தடை செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பாரதூரத்தன்மையை தற்போது விளங்கிக் கொண்டுள்ளதுடன் தவறுகளையும் திருத்திக் கொண்டுள்ளன.

இந்நிலையில் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுப்பெறுவதற்கு பிரதான காரணியாக உள்ள தப்லீக் ஜமாஅத் அமைப்பை தடை செய்வது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினர் தற்போது முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் தவறானவை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மைக் காரணி, அடிப்படைவாதிகளின் நோக்கம் உள்ளிட்ட காரணிகளை ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டுள்ளோம்.

உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ள இஸ்லாமிய அடிப்படிவாதத்தின் விளைவுகளை பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தற்போது உணர்ந்து கொண்டுள்ளதுடன் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நடவடிக்கைககளையும் மேற்கொண்டு வருகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் சவூதி அரேபிய இளவரசர் சல்மான் கடந்த வாரம் முன்னெடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கது. சவூதி அரேபியாவில் செயற்படும் தப்லீக் ஜமாத் அமைப்பு, தவா என்ற எண்ணக்கருவை கொண்டு அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்றார்.

    


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.