மருத்துவர் ஷாபி சஹாப்தீனுக்கு செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு உத்தரவு

 மருத்துவர் ஷாபி சஹாப்தீனுக்கு  செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு உத்தரவு

பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு, நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மருத்துவப் பிரிவின் மருத்துவர் ஷாபி சஹாப்தீனுக்கு  செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைச் சம்பளத்தையும் செலுத்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி சானக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.


கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு மருத்துவர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் சேவையில் இருந்து நீக்கப்படவில்லை என்பதுடன் அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பபட்டுள்ளார்.

இதன் காரணமாக சம்பள நிலுவையை செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவர் ஷாபி சிஹாப்தீன்,  பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார் என்ற  சர்ச்சைக்குரிய செய்தியை சிங்கள பத்திரிகை ஒன்று கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதலில் வெளியிட்டிருந்தது. இதனையடுத்து சில தினங்களில் குற்றவியல் விசாரணை திணைக்களம் அவரை கைது செய்தது.

விசாரணைகளை நடத்திய குற்றவியல் விசாரணை திணைக்களம், மருத்துவர் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனால், கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் திகதி மருத்துவர் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.