நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் பச்சை மிளகாய்

 நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. 



பச்சை மிளகாயில் வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதனால் நம் உடலின் பாதுகாவலனாக அது உதவுகிறது. இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை காக்கிறது பச்சை மிளகாய். மேலும் இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோயிலிருந்து காக்கும். மேலும் இது முதுமை தோற்றம் உண்டாவதையும் குறைத்து இளமையாக வைத்திருக்கும்.

பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்து கொள்வதற்கு பச்சை மிளகாய் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் உணவில் மிளகாய் சேர்த்து கொள்வதால் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுக்கலாம். 

பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.



அதிகமாக அடிப்பட்டவர்களும் காயம் அடைந்தவர்களும் உணவில் பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளும் போது வலி தண்டுவடத்தின் மூலம் நேரடியாக மூளையினை தாக்குவதை தடுக்க முடியும்.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.ஏனெனில் பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்துள்ளது.முக்கியமாக பெண்களுக்கு நல்லது.

ஆண்கள் பச்சை மிளகாயினை அதிகளவில் உணவில் சேர்த்து கொண்டால், புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும். 

பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் உள்ளது.

பச்சை மிளகாயை உணவில் சேர்த்தால் , தேவையில்லாத கொழுப்புகள் குறைந்துவிடும்.அதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.

பச்சை மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்வதால், மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.

பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது.பச்சை மிளகாய் பயன்படுத்துவதால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது. அதுவும் முக்கியமாக சரும தொற்றுகள் நீங்க உதவி செய்கிறது.

இந்த மிளகாயினை காயவைத்து வற்றல் ஆனபின் சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்துவிடும். எனவே பச்சை மிளகாயினை சாப்பிடுவதே முழு பயனையும் தரும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.