வாழைச்சேனையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு : மக்கள் விசனம்

 வாழைச்சேனையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு : மக்கள் விசனம்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்றாளர் அடையாளங் காணப்பட்டத்தையடுத்து கடந்த ஏழு தினங்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணாமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ள போதிலும், சுகாதாரத் துறையினர், பாதுகாப்புத்தரப்பினர்,

அரச அலுவலர்கள் அடங்கிய கொரோனா தடுப்புச்செயலணி தம்மால் முடிந்த அத்தனை உதவிகளையும் இரவு, பகல் பாராது மேற்கொண்டு வருகின்றமை பாராட்டுக்குரியது.

அதே நேரம், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படா வண்ணம் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் கையிலிருப்பில் உள்ளதாக கடந்த,

ஒரு சில தினங்களுக்கு முன்னர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது வர்த்தக சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு சில வியாபாரிகள் கோழி, தக்காளி, மிளகாய், வெங்காயம் போன்ற,

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை நிர்ணயிக்கப்பட்ட விலைகளை விட அதிகரித்துள்ளதாகவும், குறிப்பிட்ட சிறு தூர இடைவெளியில் இரு பிரதேசங்களுக்கிடையில் பொருட்களின் விலையில்,

பாரிய வித்தியாசம் உள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பொது மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரும் பொது மக்களும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்,

நாளாந்தம் கூலித் தொழிலில் ஈடுபடுவோர், அன்றாடம் வியாபாரம் செய்வோரும் தமது வருமானத்தை இழந்துள்ள இந்த இக்கட்டான நிலையில், இவ்வாறான விலை அதிகரிப்புக்கள் மென்மேலும் சுமையை அதிகரிக்கும்.

இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அநாவசிய விலை அதிகரிப்பைத் தவிர்த்து நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க வர்த்தகர் முன்வருவதுடன்,

நியாயமான காரணங்களின்றி நிர்ணய விலையை விட அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், வர்த்தக நிலையங்களுக்கெதிராக,

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பது பொது மக்களின் வேண்டுகோளாகும்.

அத்துடன், அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளுக்கு அல்லது அதனோடு சம்பந்தப்பட்டோருக்கு முறைப்பாடுகளை பொது மக்கள் வழங்கினால் உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக அமையும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.