நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து பெண் ஒருவர் கொலை

 நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து பெண் ஒருவர் கொலை

ஹொரவ்பொத்தான நகர் பகுதியில் உள்ள தனியார் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் வைத்து பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (26) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தனது கணவருடன் கடன் வழங்கும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு முச்சக்கரவண்டியில் வருகை தந்து கணவருக்கு முகக்கவசம் இல்லாததினால் தனது பிள்ளையை வைத்துக் கொண்டு முன்னால் நின்ற போது இனம் தெரியாத நபர் ஒருவர் நிதி நிறுவனத்துக்குள் உட்புகுந்து கத்தியால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹொரவ்பொத்தான- 122 கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட லேவாசபிரிவெவ பியதாசகே தம்மிகா பிரியதர்ஷினி (34 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தான பொலிசார் தெரிவித்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.