நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி



நாட்டில் நேற்றைய தினம் 335 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இலங்கையின் மொத்த உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 9,205 ஆக காணப்படுகிறது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 335 புதிய கொரோனா தொற்றாளர்களில் 308 பேர் முன்னர் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்புகளை கொண்டவர்கள் ஆவர்.

ஏனைய 27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை - பேலியகொடை கொவிட்-19 கொத்தணியில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 5,731 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கிடையில் 32 கொரோனா நோயாளர்கள் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளமையினால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 4,075 ஆக உயர்வடைந்துள்ளது.

12 வெளிநாட்டினர் உட்பட மொத்தமாக 5,111 நோயாளர்கள் நாடு முழுவதும் உள்ள 37 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 432 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.