மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை! – வைத்திய நிபுணர் சுதத் சமரவீர


மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை! – வைத்திய நிபுணர் சுதத் சமரவீர. அக்டோபர் 23,2020 வெள்ளி

மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுமா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆய்வுப்பூர்வமான தகவல்களும் உறுதிப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மீன்களை தொட்ட பின்னர் கைகளை சரியாக கழுவினால், அந்த சந்தர்ப்பங்களில் முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொண்டால் நோய் பரவுவதை தவிர்க்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.