கொரோனா நீ வேணா

 கொரோனா நீ வேணா... 


கொத்துக் கொத்தாய் மனித உயிர்களை 

கொள்ளை கொண்டு போக 

வந்த கொரோனாவே.. !!

எங்கிருந்து வந்தாய் நீயும் 

ஏன் இந்த கொலைவெறி உனக்கும்... !

உறவுகளைப் பிரிந்தோம்! 

உணர்வுகளைத் தொலைத்தோம்!

தாயைக் கூட காண முடியாமல் 

தனியே நின்று தவிக்கின்றோம்... !!

கூடி வாழ்ந்தோரெல்லாம் 

கோடிக்கொரு மூலையானோம்!

நிலை குழைந்து நிற்கிறோம்!

நிம்மதியின்றி தவிக்கிறோம்!

உன்னைக் கண்டு பயந்தோம்!

உன்னை அழிக்க மருந்தின்றி தவிக்கிறோம்!

பூட்டிய வீட்டிற்குள் பதுங்கிக்  கிடக்கின்றோம்!

பசி பட்டினியால் பிழைக்கின்றோம்!

உனக்கு பழி கொடுக்க 

இன்னும் யார் யாரோ என 

எண்ணித் தவிக்கின்றோம்!

உலகமே உன்னைக் கண்டு

பயத்தால் உறைந்து கிடக்கின்றது!

மனிதனைக் கண்டு மனிதனே 

பயந்து கொள்ளும் நிலை...!

முகக் கவசமின்றி 

மூச்சு விடப் பயம்!

இருமல் சத்தம் கேட்டு விட்டால் 

பெற்ற தாயைக் கண்டு பயம்!

பெற்ற பிள்ளையைக் கண்டாலும் பயம்!!

ஏன் இந்த அவல நிலை...!??? 

மனிதனை அடக்கி ஆழும் 

சர்வாதிகார மனிதனைக் கூட 

மண்ணறைக் குழிக்குள் 

பதுங்கி வாழச் செய்த கொரோனாவே..!!

உலகத்தையே அச்சுறுத்தும் 

பொல்லாத மனிதர்களை அழித்து 

புதியதோர் உலகம் படைத்திட 

புறப்பட்டு வந்தாயா...!?? 

நீ களையெடுத்தது போதும் 

மற்றவர்களை ஏன் வதைக்கின்றாய்...!?? 

நீ சுத்தப்படுத்திய உலகில் வாழ 

உயிர்கள் வேண்டாமா..!?? 

உன்னை மண்டியிட்டு கேட்கிறோம் 

எம்மை மன்னித்து விடு..!!

இந்த உலகத்தை விட்டே சென்று விடு..!!

எம்மை நிம்மதியாய் வாழ வழி விடு...!!!

Fathima Nifra Nijam

Daluwakotuwa, 

Kochchikade, 

Negombo.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.