பூமியை மோதும் வேகத்தில் வந்துகொண்டிருக்கும் சிறுகோள். அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

பூமியை மோதும் வேகத்தில் வந்துகொண்டிருக்கும் சிறுகோள். அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்.


பூமியை நோக்கி மோதும் வேகத்தில் சிறுகோள் ஒன்று வந்து கொண்டிருப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் சுற்றி வரும் கோள்கள் மற்றும் விண்கற்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் அபோபிஸ் என்ற சிறு கோளை நாசா கண்டறிந்துள்ளது.

சூரிய குடும்பத்திற்கு மிக நெருக்கமான வரும் அந்த சிறு கோள் குறிப்பிட்ட வட்டபாதை அற்றதாகவும்,

ஒரே திசையில் பயணித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அபோபிஸின் பயண திசை மற்றும் வேகத்தை பொறுத்து அந்த சிறுகோள் பூமியின் மீது 2068ம் ஆண்டில் தாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கணக்கீடு செய்துள்ளனர்.

இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரலாற்றில் முன்னதாக இதுபோல பல சிறு கோள்கள் பூமியை கடந்து சென்றுள்ளதால்,

இதுவும் எந்த அசம்பாவிதமும் இன்றி கடந்து போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.