குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்

 இருவரும் சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். ஜோஷ் பிலிப் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 7.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது

 


அடுத்து வந்த விராட் கோலி 9 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 15 ரன்னிலும், ஷிவம் டுபே 2 ரன்னிலும் வெளியேறினர்.

 

தேவ்தத் படிக்கல் 45 பந்தில் 74 ரன்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்துள்ளது. குர்கீரத் சிங் மான் 14 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.

 

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

 

19 பந்துகளில் 18 எடுத்த நிலையில் டிகாக்கும், 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷனும் வெளியேறினர். அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் சவ்ரவ் திவாரியுடன் ஜோடி சேர்ந்தார். 

 

ஆனால், திவாரி 5 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். பின்னர் வந்த குர்னால் பாண்டியா (10 ரன்), ஹர்திக் பாண்டியா (17 ரன்) அடுத்தடுத்து வெளியேறினர்.

 

ஆனால், ஒரு புறம் விக்கெட்டுகள் சாய்ந்த மோதும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். 

 

இறுதியில் மும்பை அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் மட்டுமே இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

 

43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 79 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

 

பெங்களூர் தரப்பில் முகமது சிராஜ் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.