ஹர்திக் பாண்டியா அதிரடிக்கு பதிலடி கொடுத்த ஸ்டோக்ஸ்... ராஜஸ்தான் அபார வெற்றி

 ஹர்திக் பாண்டியா அதிரடிக்கு பதிலடி கொடுத்த ஸ்டோக்ஸ்... ராஜஸ்தான் அபார வெற்றி

ஐ.பி.எல் 2020 தொடரின் 45-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அபுதாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்ப அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் ஆல்ரவுண்டரும் அதிரடி ஆட்டக்காரருமான ஹர்திக் பாண்டியா இறுதி ஒவர்களில் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 60 ரன்கள் விளாசினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் விளாசியது.

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடினார். உத்தப்பா 13 ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 11 ரன்னிலும் அவுட்டாகினார்.

இவர்களை தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டோக்ஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 

சஞ்சு சாம்சன் 31 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.