கவிதை வரிகள்

 மனசுக்கு பிடித்தது போல் எல்லோருக்கும் உறவு அமைந்துவிடுவதில்லை.

ஆனாலும் சமாளித்து வாழலாம் என்றால் 

அந்த உறவு உண்மையாகவும் இருப்பதில்லை

பலருடைய கண்ணீருக்கான காரணமே சரியான உறவைத் தேர்வு செய்யாதது தான்

சிலருடைய பிரிவுக்கான சூழ்நிலை பொய்யான நபரை நம்பியதுதான்

உறவு பிரிந்து விடும் என்று உண்மைகளை மறைத்து 

பொய்யாக சந்தோசத்தை பெறுவதை விட...

உண்மையைப் பேசி அவரை நிரந்தரமாக பிரிந்து 

நிம்மதியாய் வாழலாம்.

 உயிரோடு இருக்கும் வரையிலான உறவை 

உணர்வுகள் தான் தீர்மானிக்கிறது

ஆனால் அந்த உறவு உண்மையானதா என்பதில் பல இதயங்கள் தோற்றுவிடுகிறது

சில நம்பிக்கைகள் துரோகத்தில் முடிகிறது

இந்த உலகத்தில் எந்த உறவும் நிரந்தரமானது இல்லை

கடைசிவரை சேர்ந்திருந்தாலும் அது ஒரு நாள் மரணத்தில் முடிந்துவிடும்.

நீங்கள் நேசிக்கும் ஒருவரின் மன ஆதங்கம் வேதனைகள் வலிகள் உங்களுக்கு புரியவில்லை என்றாலும் 

உயிரோடு இருக்கும் வரை உங்களை நேசிப்பவர்களுக்காவது உண்மையாக இருங்கள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.