இலங்கையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்

 இலங்கையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்



இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது.


இந்த விடயம் தொடர்பில் ஆராய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்காக தேவைப்படும் நிதியை பெற்றுக்கொடுத்தல், தடுப்பூசிக்கான தேவையுடையவர்களை அடையாளங்காணல், அது தொடர்பிலான பௌதீக வள முகாமைத்துவம், தகவல்களை பெற்றுக்கொள்ளல், விடயங்களை முன்வைத்தல் என்பனவற்றை குறித்த குழு முன்னெடுக்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


COVID-19 தொற்றைத் தடுப்பதற்காக இலங்கையில் அதற்கான தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.


இந்த கலந்துரையாடலில் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஔடதங்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியும் பங்குபற்றியிருந்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.