திருமண வீட்டிற்கு 50 - மரண வீட்டிற்கு 25 ?

திருமண வீட்டிற்கு 50 - மரண வீட்டிற்கு 25 ?


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் இடம்பெறும் திருமணங்கள் மற்றும் மரண சடங்குகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதன்படி ஊரடங்கு சட்டம் அமுல்டுத்தப்படாத பிரதேசங்களில் செயற்பாடுகளை மட்டுப்படுத்த வேண்டிய முறை தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி அமைப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரதேசங்களில் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மரண வீட்டில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 25 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலயங்கள், விகாரைகள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் பொது மக்கள் ஒன்று கூடும் செயற்பாடுகள் அல்லது கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் ,அவ்வாறான இடங்களில் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் இருக்க வேண்டிய பக்தர்களின் எண்ணிக்கை அதிக பட்சம் 25ஆக காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.