கொரோனா தொற்றியவருக்கு 7 வது நாளில் நடக்கும் மாற்றம்! ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழகம் வெளியிட்ட தகவல்

கொரோனா தொற்றியவருக்கு 7 வது நாளில் நடக்கும் மாற்றம்! ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழகம் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகி, நோய் அறிகுறியை வெளிப்படுத்தாத மற்றும் சிறு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களிடமிருந்து,

ஏழு நாட்களின் பின்னர், மற்றுமொருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழக மருத்துவ பீடத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பிரிவின் பிரதானி, பேராசிரியர் நீலிகா மலவிகே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

விஞ்ஞான ரீதியான தகவல்களின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா நோயாளர் ஒருவருக்கு, நோய் அறிகுறிகள் தென்படாவிட்டால், அவரை தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடுமையான நோய் அறிகுறிகள் வெளிப்படுத்துபவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

நோய் அறியக்குறியை வெளிப்படுத்தாத மற்றும் சிறு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களிடமிருந்து ஏழு நாட்களின் பின்னர்,

மற்றுமொருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படாதமையினால் ஏனைய உலக நாடுகளில் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

ஆனால், இலங்கையில் அவ்வாறானவர்கள் 14 நாட்கள் அந்த இடங்களில் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னரே சமூகமயப்படுத்தப்படுகின்றனர் என்று,

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்ககழக மருத்துவ பீடத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பிரிவின் பிரதானி, பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், கடுமையான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துபவர்களிடமிருந்து, 7 அல்லது 10 நாட்களில் ஏனையவர்களுக்கு தொற்றக்கூடிய அபாயம் உள்ளது.

எனவே அவ்வாறானவர்களை வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.