தனி ஆளாக போராடிய வில்லியம்சன்- ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த டெல்லி அணி

தனி ஆளாக போராடிய வில்லியம்சன்- ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த டெல்லி அணி

ஐ.பி.எல் 2020-ம் ஆண்டு தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற குவாலிபையர் சுற்றில் 2-வது போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.

அதனையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கவீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரியன் கார்க் களமிறங்கினர். வார்னர் 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

அவரைத் தொடர்ந்து, கார்க்கும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, மனிஷ் பாண்டேவும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 

மறுபுறம், கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தார். அவர், அணியைச் சரிவிலிருந்து மீட்டார். வில்லியம்சனுக்கு அப்துல் சமித் துணையாக ரன்களைச் சேர்த்தார். வில்லியம்சன் அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 63 ரன்கள் குவித்திருந்தநிலையில், ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, சமித்தும் 33 ரன்கள் எடுத்திருந்தநிலையில், ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணி எடுத்தது. அதனையடுத்து, 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.