நேரலையை பாதியில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள் - ட்ரம்ப் மீது அதிருப்தி!

நேரலையை பாதியில் நிறுத்திய அமெரிக்க ஊடகங்கள் - ட்ரம்ப் மீது அதிருப்தி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நேரடி உரையை அமெரிக்க ஊடகங்கள் திடீரென நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகமெங்கும் உள்ள இளைய தலைமுறையினரின் கனவு தேசம் அமெரிக்கா. அந்த நாட்டின் ஜனாதிபதி ஆசனத்தை குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் (வயது 74) தக்க வைப்பாரா அல்லது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் வசம் அந்த ஆசனம் சென்று விடுமா என்பது மில்லியன் டொலர் கேள்வியாக எதிரொலித்து கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற போது, அந்த நாட்டின் 120 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், 66.9 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்து உள்ளதாக அமெரிக்க ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 538 தேர்தல்சபை வாக்குகளில் 270 வாக்குகளை பெற்றவரே அமெரிக்க ஜனாதிபதி பதவியில் அமர்ந்து அதிகாரம் செலுத்த முடியும் என்ற நிலை உள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்த அடுத்த கணமே வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்று முன்தினம் ஜோ பைடன் 238 வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களை ஜோ பைடன் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவரது நிலை நேற்று மேலும் வலுப்பெற்றது.

கடைசியாக கிடைத்த தகவல்கள்படி, ஜோ பைடன் ஜனாதிபதி பதவியை கைப்பற்றுவதற்கு மேலும் 6 வாக்குகள் மட்டுமே தேவை. அவர், 264-தேர்தல் சபை வாக்குகளை பெற்று, வெற்றிக் களிப்பில் உள்ளார்.

அவரை எதிர்த்து கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ள டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி இருக்கிறார். அங்கு அவருக்கு 6 வாக்குகள் கிடைத்து விட்டால் 270 என்ற இலக்கை அவர் எளிதாக அடைந்து விடுவார். வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ட்ரம்ப் ஊடகங்களிடம் நேரலையில் செவ்வியளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஜனநாயக கட்சியினர் சட்டவிரோதமாக வாக்குகளை எங்களிடம் இருந்து திருடி தமது வெற்றிக்காக பயன்படுத்துகிறார்கள் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சுமார் 17 நிமிடங்கள் தொடர்ந்து பேசிய ட்ரம்ப்பின் நேரடி செவ்வியை அமெரிக்க ஊடகங்கள் திடீரென நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப் தவறான தகவல்களை பரப்புவதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சுமத்தியுள்ளன.

ஜனாதிபதி ட்ரம்பின் செவ்வி நேரலையை ஊடகங்கள் திடீர்னெ நிறுத்தியது அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.