அபார வெற்றியுடன் விடைபெற்றது சென்னை அணி; பஞ்சாப் அணிக்கு ஆப்பு

அபார வெற்றியுடன் விடைபெற்றது சென்னை அணி; பஞ்சாப் அணிக்கு ஆப்பு

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமயிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தீபக் ஹூடா 62* ரன்களும், ராகுல் 29 ரன்களும், மாயன்க் அகர்வால் 26 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 153 ரன்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் நிகிடி 3 விக்கெட்டுகளையும், தாகூர், தாஹிர் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான டூபிளசி 48 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கெய்க்வாட் மற்றும் அம்பத்தி ராயூடு கூட்டணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை பொறுமையாக எதிர்கொண்டு ரன் குவித்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ருத்துராஜ் கெய்க்வாட் 62 ரன்களுடனும், அம்பத்தி ராயூடு 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் நடப்பு தொடரில் தனது 8வது தோல்வியை பதிவு செய்துள்ள பஞ்சாப் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.