பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்.வெளியேறியது பெங்களூரு

பெங்களூரை வீழ்த்தியது ஹைதராபாத்.வெளியேறியது பெங்களூரு

ஐ.பி.எல் 2020 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அபுதாயில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினர். ஆர்.சி.பி-யின் தொடக்கத்தை பலம்படுத்துவிதமாக அவரே களமிறங்கியதே மிகப் பெரிய பின்னடைவாக இருந்தது. விராட் கோலி 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் படிக்கலும் ஹோல்டர் பந்துவீச்சில் 1 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார்.

ப்ளே ஆஃபின் முக்கிய போட்டியில் ஆரம்பத்திலேயே சொதப்பிய ஆர்.சி.பி டி-வில்லர்ஸ் மற்றும் பின்ச் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் பொறுமையாக விளையாடியதால் ஆமை வேகத்தில் ரன்ரேட் இருந்தது. டி-வில்லியர்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.

சன்ரைசர்ஸ் அணி இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி ஆர்.சி.பி ரன்குவிக்காமல் கட்டுப்படுத்தினார்கள். இதனால் ஆர்.சி.பி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. சொற்ப ரன்கள் தான் இலக்கு என்பதால் சன்ரைசர்ஸ் அணி பொறுமையாக விளையாடியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் திணறினர். சன்ரைசர்ஸ் அணி 67 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்தது.

சன்ரைசர்ஸ் விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பொறுப்புடனும் நிதானமாகவும் விளையாடினர். விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இருந்த நிலையில் நவ்தீப் சைனி ஓவரை வீசினார். பரபரப்பாக சென்ற போட்டியில் ஹோல்டர் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.

இதையடுத்து ஹைதராபாத் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள 2-வது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி - சன்ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன.
No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.