நகம் கடிப்பதால் ஏற்படும் உடல் நலகேடுகள்.

 நகம் கடிப்பதால் ஏற்படும் உடல் நலகேடுகள்.நம்மில் பலர், கோபம், வருத்தம், அழுகை, ஆழ்ந்த சிந்தனை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடாக நகம் கடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். 

இதற்கு குழந்தைகளும் விதிவிலக்கல்ல. 


பெரும்பாலான நபர்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு. இது மிகவும் மோசமான பழக்கம். இதனால், ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் எழுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. 


நகங்களை கடிப்பதால், நகத்தை சுற்றியுள்ள சருமம் மிகவும் பாதிக்கப்படும். நகங்களை கடிப்பவர்கள், சில சமயம் அதை விழுங்கவும் வாய்ப்பு உண்டு. இப்படி விழுங்குவதால், வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே தங்கி பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிடும். 


சிறுவர்கள் அடிக்கடி நகம் கடிக்கும் பட்சத்தில்,  

சமிபாடு அடைய வைக்கும் அமிலத்தால் அவை செரிமானமாகால், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். செரிமானம் ஆகாத நகம் குடல் வால் பகுதியில் தங்கும். இதனால் அப்பன்டிசைட்டிஸ் எனப்படும் குடல் வளரி வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.


எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் ரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 


தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்துவிடும். பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுமையாக மூட முடியாத நிலை கூட ஏற்படும். 


நகம், பாக்டீரியா வளரும் இடம். சல்மனெல்லா, இ.கோலி., பாக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. இதனால் நகங்களைக் கடிக்கும் போது, அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி, எளிதாய் நோய் தொற்றிக்கொள்ளும்.
No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.