பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்.

 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.


கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண, வலய மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது பாடசாலைகளில் 50 சதவீத மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து நேரமாற்றம் இன்றி, சமுக இடைவெளி உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கல்வி செயற்பாடுகளை நடத்துவது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.


எனினும் இதுதொடர்பான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.


அரச பாடசாலைகளில் நவம்பர் 9ம் திகதி முதல் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், 2ம் அலை கொவிட்19 பரவல் காரணமாக 2 வாரங்களுக்கு இந்த நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.