திடீரென வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரபரப்பு

திடீரென வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் அமெரிக்காவில் ஏற்பட்ட பரபரப்பு.


திடீரென வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பரபரப்பு

தேர்தல் தினமான நேற்றையதினம் அமெரிக்காவில் பலருக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மர்ம அழைப்புகள் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தானியங்கி அழைப்பில் ஒலித்த குரல்” வீட்டிலேயே இருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்” என்று கொரோனா வைரஸ் ரிங்டோன் போல கூறிய பின் அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நாளில் வன்முறைகள் நிகழலாம் என்ற அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் பலருக்கு வந்த இந்த மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அழைப்பில் கிருமிப்பரவல் பற்றியோ, அதிபர் தேர்தல் பற்றியோ குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை என்ற போதும் தேர்தல் நாளில் வந்ததால், இது குறித்து அமெரிக்க மத்திய புலனய்வுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த தொலைபேசி அழைப்புக்கள் தானியங்கி மூலம் அமெரிக்கர்களுக்கு வந்துள்ளதுடன், எனினும் மக்களுக்கு பின்னர் இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்களர்கள் வாக்களிக்கும் ஆர்வத்தை தடுக்கும் முகமாக இந்த அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.