இன்று நள்ளிரவுடன் மீண்டும் முடக்கப்படுகிறது பிரித்தானியா

இன்று நள்ளிரவுடன் மீண்டும் முடக்கப்படுகிறது பிரித்தானியா.

இன்று நள்ளிரவு முதல் இங்கிலாந்தில் மீண்டும் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது.

ஐரோப்பியாவில் மீண்டும் எழுந்துள்ள கொரோனா அலையினை கட்டுப்படுத்தும் முயற்சியாக பல நாடுகள் ஏற்கனவே முடக்கம் அறிவித்துள்ள நிலையில்,

இங்கிலாந்திலும் குறித்த நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நாளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ள குறித்த முடக்கத்தின் அடிப்படையில் அந்நாட்டின் மதுபானசாலைகள்,

அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்களாகியன எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதிவரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே வகையான நடவடிக்கைகள் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்திலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இத்தாலியின் பல பிராந்தியங்கள் சிவப்பு அபாய வலையங்களாக அறிவிக்கப்படவுள்ளன.

குறித்த சூழ்நிலை தொடர்பில் நேற்று (புதன்கிழமை) நாடாளமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன்,

கொரோனா வைரஸின் முதல் அலையினைக் காட்டிலும் இரண்டாவது அலையில் மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், தனது நட்பு நாடுகளின் கொரோனா பரவல் நிலைகளை அவதானித்த வகையில், கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பில் பிரித்தானிய மக்களின் வாழ்க்கையினை பணயம் வைக்க தான் ஒருபோதும் தயார் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவில், 25 ஆயிரத்து 177 புதிய தோற்றாளர்கள் பதிவாகியிருந்தனர்.

மேலும் குறித்த வைரஸ் தொற்றின் காரணமாக அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 492 மரணங்கள் பதிவாகியிருந்த அதேவேளை 12 ஆயிரத்து 320 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.