கொரோனா தடுப்பூசிக்காக 1000 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது.

 கொரோனா தடுப்பூசிக்காக 1000 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது.


கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு 1000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதானையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வுப்பிரிவிற்கு இன்று காலை கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 20,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

40 வயதான குறித்த சந்தேகநபர் கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊழியர் என தெரியவந்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.