ரிமோட்டின் பற்றரி சிக்கி 17 மாதமேயான குழந்தை உயிரிழப்பு.

 ரிமோட்டின் பற்றரி சிக்கி 17 மாதமேயான குழந்தை உயிரிழப்பு.


பெற்றோர்களே அவதானம்..

தொண்டையில் தொலைக்காட்சி ரிமோட்டின் பற்றரி சிக்கி காயம் ஏற்பட்டதால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் டெக்ஸஸ் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

17 மாதமான ரிஸ் என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முதலில் குறித்த சிறுமிக்கு தடிமன் ஏற்பட்டுள்ளது என நினைத்த பெற்றோர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சென்ற போது எடுக்கப்பட்ட கதிரியக்க பரிசோதனையின் போதே அவர் ரிமோட்டின் பற்றரியை விழுங்கி உள்ளார் என தெரிய வந்துள்ளது.

அதன் பின் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.