பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டம்; போதை பொருட்கள் மீட்பு... பல பெண்கள் உட்பட 34 பேர் கைது.

 பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டம்; போதை பொருட்கள் மீட்பு... பல பெண்கள் உட்பட 34 பேர் கைது.


 கொழுப்பின் புறநகர் பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட

பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்த பேஸ்புக் விருந்து சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர், யுவதிகள் உட்பட 34 பேர் பிலியந்தலை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பிலியந்தலை விடுதி ஒன்று சுற்றிவளைத்து சோதனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை சோதனைக்குட்படுத்தும் போது 16 பேரிடம் கஞ்சா பக்கட்களும், 12 ஐஸ் போதை பொருள் மற்றும் ஆபத்தான போதை பொட்களும் பொலிஸாரால் கைப்பட்டப்பட்டுள்ளன.

இளைஞர், யுவதிகள் குறித்த போதைப் பொருட்களை அருந்தியுள்ளார்களா என சோதனையிட களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விருந்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களுக்குள் விடுதி உரிமையாளரான பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.