இலங்கையில் கொவிட் தொற்றினால் 500 பேர் உயிரிழப்பு.

 இலங்கையில் கொவிட் தொற்றினால் 500 பேர் உயிரிழப்பு.


இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500யை தாண்டியுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம், இறுதியாக 5 உயிரிழப்புக்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோரின் விபரம்

01.கண்டி – பல்லேகெல்ல பகுதியில் 74 வயதான ஆண்ணொருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த மாதம் 2ம் திகதி உயிரிழந்துள்ளார்.

02.நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

03.பரவர்தனஓய பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்ணொருவர், பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

04.மாத்தறை பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 25ம் திகதி உயிரிழந்துள்ளார்.

05.கன்னத்தொட்டை பகுதியைச் சேர்ந்த 67 வயதான ஆண்ணொருவர், கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி உயிரிழந்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.