மூன்று மசாஜ் நிலையங்களில் ஒரே நபரால் துப்பாக்கிப் பிரயோகம்.. 6 பெண்கள் உட்பட எட்டுபேர் உயிரிழப்பு.

 மூன்று மசாஜ் நிலையங்களில் ஒரே நபரால் துப்பாக்கிப் பிரயோகம்.. 6 பெண்கள் உட்பட எட்டுபேர் உயிரிழப்பு.ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் அமைந்துள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் செவ்வாயன்று

இரவு முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஆறு ஆசிய பெண்களும் அடங்குவதாக தெரிவித்த பொலிஸார், துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபரையும் கைது செய்தாக கூறினர்.

அட்லாண்டாவின் வடக்கே செரோகி கவுண்டியில் உள்ள யங்ஸ் ஆசிய மசாஜ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஒரு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மாலை 6 மணிக்கு சற்று முன்னர் அட்லாண்டாவில் அமைந்துள்ள மேலும் இரு மசாஜ் நிலையங்களில் நடந்த துப்பாக்கி சூட்டின்போது நான்கு பேர் இறந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இந்த துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தில் 21 வயதுடைய ராபர்ட் ஆரோன் லாங் என்ற நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.