கொழும்பின் முக்கிய வீதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 8000 பேர் – பொலிஸார் எச்சரிக்கை

 கொழும்பின் முக்கிய வீதிகளில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 8000 பேர் – பொலிஸார் எச்சரிக்கை


கொழும்பின் முக்கிய வீதிகளில் போதைப்பொருளுக்கு அடிமையான 8000க்கு அதிகமானவர்கள் நடமாடுகின்றனர் என அறிவித்துள்ள புறக்கோட்டை பொலிஸார் பொதுமக்களை பயணிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்களிற்கு அறிவுறுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவுள்ளனர்.

பொலிஸார் பயணிகள் பேருந்துகளிற்குள் ஏறி நகரில் நடமாடுகின்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் குறித்தும் பயணிகள் உடமைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளனர்.

புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பில் பொருள் கொள்வனவில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்தே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் கொழும்பிற்கு வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பல சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.