தேசிய கொடி அவமதிப்பு விவகாரம்க. கடும்எதிர்ப்புக்கு மத்தியில் AMAZON நிறுவனம் எடுத்து முடிவு.

தேசிய கொடி அவமதிப்பு விவகாரம்க. கடும்எதிர்ப்புக்கு மத்தியில் AMAZON நிறுவனம் எடுத்து முடிவு.


இலங்கை விடுத்தகோரிக்கைக்கு அமைய, இலங்கை தேசியக் கொடியின் படம் பொறிக்கப்பட்ட கால்மிதிகள் தொடர்பான விளம்பரத்தை அகற்றுவதற்கு அமசோன் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீனாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட கால்மிதிகளில் இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை பயன்படுத்தியமை தொடர்பில் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விடயம் தொடர்பிலான தகவல்களை சீன வௌிவிவகார அமைச்சிற்கு வழங்கி, இலங்கையின் தேசியக் கொடியை தவறாக பயன்படுத்தி கால் மிதிகள் மற்றும் இதர பொருட்கள் தயாரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தேசியக் கொடியை பயன்படுத்தி கால்மிதிகள் தயாரிப்பதையும், அதுபோன்ற எவ்வித பொருட்களை விற்பனை செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறும் அமசோனில் இந்த தயாரிப்புகளை சந்தைப்படுத்திய நிறுவனத்திற்கு தூதரகத்தினால் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து குறித்த விளம்பரம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், இலங்கையின் தேசியக் கொடியுடன் கூடிய எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்கு சீனாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரம் அறிக்கையினூடாக அறிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.