மதுபோதையில் வாகனம் செலுத்தி, மரணத்தை ஏற்படுத்தினால் எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை தெரியுமா?

 மதுபோதையில் வாகனம் செலுத்தி, மரணத்தை ஏற்படுத்தினால் எத்தனை ஆண்டு சிறைத் தண்டனை தெரியுமா?


இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு சென்று, மது அருந்திய பின்னர், மதுபோதையில் வாகனம் செலுத்துவோரின் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 95000திற்கும் அதிகமான சாரதிகள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதியொருவருக்கு 25,000 ரூபா தண்டப் பணம் அறவிடுவதற்கு நீதிமன்றத்திற்கு இயலுமை உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, மதுபோதையில் வாகனம் செலுத்தி, மரணத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், 25,000 ரூபா தண்டப் பணம் அறவிடப்படுவதுடன், அவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையை விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு இயலுமை காணப்படுகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.